×

வண்ணாரப்பேட்டையில் ரேஷன் கடைக்கு அடிக்கல்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்தில், 52வது வார்டுக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை விஜயராகவன் சாலை பகுதி  மக்கள் ரேஷன் கடைக்கு செல்வதாக இருந்தால் சுமார் 5 கி.மீ. தூரம் வரை செல்லவேண்டியுள்ளது. இதனால் இதே பகுதியில் புதிய ரேஷன்கடை அமைத்து தர வேண்டுமென்று மாமன்ற உறுப்பினர் கீதா சுரேஷிடம் கோரிக்கை வைத்தனர். 52வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கி, புதிய ரேஷன் கடை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினர் கீதாசுரேஷ் தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கலந்துகொண்டு புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டினர்.நிகழ்ச்சியில் ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ், சென்னை மாநகராட்சி 5வது மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுகவினர், பொதுமக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Tags : Vannarappat , Foundation stone for ration shop at Vannarappat
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...